பாக்கு நீரிணையை நீந்தி கடந்த, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட வீரர் கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர, கின்னல் உலக சாதனை படைப்பதற்காக தயாராகி வருகின்றார்.
குறித்த நிகழ்வு, நாளை காலை 6 மணிக்கு கல்கிசை கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு , உலக கடல் தினத்தை முன்னிட்டு ‘பிளாஸ்டிக் வேண்டாம் என்று கூறுங்கள்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதன்போது, கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 கிலோகிராம் எடையுடைய பிளாஸ்டிக் மூடையை முதுகில் கட்டி இழுத்து கொண்டே நீந்திச் செல்லவுள்ளார்.
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் குறித்த நீச்சல் சாதனையை முறியடித்து வெற்றி ஒருவன் செய்தி பிரிவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.