கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மற்றும் கொத்தடுவ பிரதேசங்களில் நுளம்பு பெருக்கம் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
ஒரு பகுதியில் தொற்று நுளம்புகளின் அடர்த்தியை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட Breteau Index – கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கணக்கிடப்படும் வழக்கமான மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுட்டெண் மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 25% ஆக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாத இறுதிக்குள் டெங்கு தொற்று தீவிரமடைந்து ‘கடுமையான’ தொற்றுநோய் நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.