சமுர்த்தி வங்கிகள் மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும்

Date:

சமுர்த்தி வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை திட்டமிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் இடையில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“அஸ்வெசும” நலத்திட்டங்கள் மூலம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அல்லது அரசாங்க நிவாரணம் தேவைப்படுபவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஆனால் மக்களை மேலும் ஒரு சார்பு மனநிலையில் வைத்திருக்க அரசு தயாராக இல்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களை அதிகாரம் பெற்றவர்களாக சமூகமயமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அந்த இலக்கை அடைய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சேவைகளை முன்னரை விடவும் மக்களின் வலுவூட்டலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நம்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...