அடுத்த சில நாட்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மற்றும் கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அனைத்து சங்கங்களுடனும் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் உற்பத்தி நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பது இதன் போது தெரியவந்துள்ளது.
“எனவே, சிமெந்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடைக்கு, குறைந்தபட்சம், 300 ரூபா முதல், 500 ரூபா வரை, விரைவில் விலையை குறைக்கச் சொன்னேன்.
இந்த விலைக் குறைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சு நம்புகிறது”
கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலையையும் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.