நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகைகள்!

Date:

உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

நாடெங்கிலும் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் இன்று காலை பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை இடம்பெற்றது.

அதேவேளை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது அல்-அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை   இடம்பெற்றது.

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் காலை 6.10 மணிக்கு நடைபெற்றது.

குருநாகலில் ஈதுல் அல்ஹா, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
பாணந்துறை ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை சரிக்கமுல்ல TC மைதானத்தில் இடம்பெற்றது.
குத்பா உரை – அஷ்ஷேஹ் அஸ்லம் ஷாபி
மடவளை மர்கஸுல் இஸ்லாஹ் திடலில் மர்கஸுல் இஸ்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று 29 திகதி பொத்துவில் ஜலால்தீன் சதுக்க மைதானத்தில் இடம்பெற்றது.

எட்டியாந்தோட்டை, பஹல கராகொடை, அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில், கராகொடை முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள்

திருகோணமலையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
காத்தான்குடியில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

 

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...