நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

Date:

நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் 95 ரக பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 95 ரக பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வௌியான செய்தியை தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நாளாந்த 95 ரக பெற்றோலின் தேவை 80-100 மெட்ரிக் தொன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு இருப்புக்கள் உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து ஓர்டர்களும் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 9000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலுடன் கூடிய அடுத்த கப்பல் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...