மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை அங்கீகரிப்பதற்காக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
குறித்த யோசனைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாளை முதல் மின்கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனையை முன்வைத்துள்ளது.
அதனடிப்படையில், வீடுகள், வழிபாட்டுதளங்களில் 30 அளவியல் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை 19முதல் 40 விகிதமாக குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.