பட்டமளிப்பு விழாவில் திடீரென நிலை தடுமாறி விழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

Date:

அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான (80) அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்த ஜோ பைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர்.

பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். விழாவின் போது சுமார் ஒன்றரை மணித்தியாலம் ஜனாதிபதி ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த சூழலில் வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...