பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் !

Date:

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம்.

குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம்.

விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம்.

பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.

எனவே இது போன்ற நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

உங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் சிக்கி சொத்துக்களை இழக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...