மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்குத் தலைமை வகித்த இலங்கையர்

Date:

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்கு  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் சாதிக் ( Ahmath Sadique) அவர்கள் தலைமை வகித்தார்.

அதேநேரம் இவர்  International Diplomats மாநாட்டில் Head of Diplomatic Expert ஆகவும் Director of Ambassadors ஆகவும் மாநாட்டை வழிநடத்தினார்.

International Diplomats எனப்படும் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு இந்தியாவின் கோவா நகரில் மே மாதம் 26 முதல் 29 வரை நடைபெற்றது. மாநாட்டின் தலைப்பு “சர்வதேச உணவு நெருக்கடியைத் தீர்ப்பது” ஆகும்.

International Diplomats எனப்படும் மாதிரி ஐக்கிய நாடுகளின் மானாடானது சர்வதேச அங்கீகாரம் உடைய ஒரு மாநாடாகும்.

மேலும் இளைஞர்களுக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கவும், அவர்களுடைய கருத்துக்களுக்கு மரியாதை அளிக்க கூடிய, மேலும் இளைஞர்கள் மத்தியில் சர்வதேச ரீதியில் அமைதியை கொண்டு செல்ல விரும்பும் ஒரு நிறுவனமாகும்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக MLA பி. ஜயப்பன் (தமிழ்நாடு)  கலந்து கொண்டார்.

மேலும் United Nations World Dr. Pamela Pal Das சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...