மின் கட்டணம் குறைக்கப்பட்டது!

Date:

நாளை (2023 ஜூலை மாதம் 1 ஆம் திகதி) முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வீட்டு மின் பானையில் பூச்சியம் முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவுக்கு 65 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு 30 ரூபாவலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42ல் இருந்து 32 ரூபாவாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு, ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது (30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது).

இதனிடையே, ஹோட்டல் துறைக்கு 26.3 சதவீத கட்டணம் குறைப்பு, கைத்தொழில் துறைக்கு ஒன்பது சதவீத கட்டண குறைப்பு, வணிக கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஐந்து சதவீதம் குறைப்பு, அரச கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஒரு சதவீதத்தால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...