வார இறுதி நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

Date:

இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கொழும்பு நகர எல்லைக்குள் விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.

கடந்த பல வாரங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

ஐந்து மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...