விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Date:

விபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் – முந்தல் 107 ஆம் கட்டை பகுதியில் மரமொன்றில் மோதி இன்று(29) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...