ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் !

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல், கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில், இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான மலேஷியத் தூதுவர் பதிலி ஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இக்கூட்டத்தில், களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் தெல்கஹவத்தகே ராஜ்குமார் சோமதேவ சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு, “இலங்கையில் முஸ்லிம்கள் மீள் நோக்கிப் பார்த்தல்” எனும் தலைப்பில் விசேட உரையாற்றவுள்ளார்.

அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மூத்த எழுத்தாளர் கலைவாதி கலீல் மீதான இரங்கலும் நிகழ்த்தப்படவுள்ளது.

இரண்டாவது அமர்வில், 2023/24 ஆம் ஆண்டுக்கான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...