ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் மாரடைப்பால் காலமானார்!

Date:

ரஷாதி டிராவல்ஸ் என்ற இலங்கை ஹஜ் பயணக் குழுவுடன் இணைந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் அப்துல் மஜீத் மொஹமட்  மாரடைப்பால் காலமானார்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த விடயத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

அவர் குருநாகல், பனகமுவவை வசிப்பிடமாகவும், இப்னகமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமாவார்

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணியாளர்கள் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ரஷாதி டிராவல்ஸ் பிரதிநிதி ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்று இறுதிசடங்குகளை பார்வையிட்டனர்.

இதேவேளை இன்றைய தினம் (30) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ஜனாஸா மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்துச் செல்லப்படும் என்றும், மக்காவில் ஜனாஸா அடக்கம் செய்யப்படும் என்றும் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...