60 வகையான மருந்துகளின் விலை இன்று முதல் குறைவு!

Date:

60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...