Sunday, November 8, 2026

உணவு விஷமடைந்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

1 min read

உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.