சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி கோழி உற்பத்தி தொடர்பில் எமது உற்பத்தி செலவுகளை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 1600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியை 1400 ரூபாவாக குறைக்க முடிந்ததாக தெரிவித்தார்.
முக்கியமான கால்நடை தீவனப் பொருளான சோளம் தட்டுப்பாடடைந்த காரணத்தினால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவ்வாறான நிலைமைகளில் 95 வீதமான சோளத்தை வெளிநாட்டு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.