எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு வழங்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கேட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் விலை திருத்தத்தை எதிர்பார்த்து புதிதாக கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளதால் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.