எரிபொருள் நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை வழங்க தீர்மானம்

Date:

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு இருப்புகளை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றம் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தைத் தொடர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கூடுதல் நேரச் செலவுகளைக் குறைக்க, கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் இயங்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைக் குறைப்பை எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிலையங்கள் முன்பதிவுகளை வழங்காதது, குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தம் மற்றும் ஒதுக்கீடு அதிகரிப்புக்குப் பிறகு நுகர்வோரின் உடனடி தேவை அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் நிலையங்களில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...