ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் வதந்தகளை பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா பொலிஸ் அறிவித்துள்ளது.
விபத்து நடந்த காணொளி என்று சில பழைய காணொளிகள் வைலரலாகியுள்ளது. இந்த ரயில் விபத்துக்கும் வைரலாகும் காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
It has come to notice that some social media handles are mischievously giving communal colour to the tragic train accident at Balasore. This is highly unfortunate.
Investigation by the GRP, Odisha into the cause and all other aspects of the accident is going on.
— Odisha Police (@odisha_police) June 4, 2023
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் மத கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. அதன்படி The Random Indian என்ற ட்விட்டர் கணக்கில், இந்த ரயில் விபத்து வெள்ளிக்கிழமை நடந்து உள்ளது. அருகிலேயே பாருங்கள் மசூதி உள்ளது என்று போஸ்ட் செய்துள்ளார்.
எப்படியாவது இந்த விஷயத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்த முடியாதா, கலவரத்தை உருவாக்க முடியாதா என்று இவர்கள் முயன்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் தினம் மற்றும் அருகே மசூதி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இது இஸ்லாமியர்களின் வேலை.. இது விபத்து கிடையாது என்பது போல அந்த நபர் மத கலவரத்தை உண்டாக்கும் விதமாக போஸ்ட் செய்து இருந்தார்.
விபத்துக்கான காரணம் மற்றும் பிற அனைத்து விதமான விசாரணைகளும் ஒடிசாவின் ஜிஆர்பி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இது போன்ற தவறான கருத்துள்ள மற்றும் தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஒடிசா போலீசார் தெரிவித்துள்ளனர்.