கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கி கட்டமைப்பு பாதிக்காது !

Date:

நாட்டின் வங்கி கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க  தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பின் போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இன்று(29) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.

இதனூடாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்டுள்ள முறிகள் மற்றும் EPF, ETF உள்ளிட்ட நிதியங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள முறிகள் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும். இதன் கீழ் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து முறிகளையும் புதிய வட்டி வீதத்தின் கீழ் மீள விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள முறிகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி செலுத்தப்படுவதுடன் அதன் பின்னர் 9 வீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும்.

புதிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தினூடாக EPF மற்றும் ETF நிதியங்களின் அங்கத்தவர்கள் தமது பணத்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...