கல்முனையில் மாட்டிறைச்சிக்கு தற்காலிக தடை

Date:

தற்போது நாட்டில் மாடுகளிடையே பரவி வரும் தோல் கட்டி நோய் காரணமாக கல்முனை மாநகர சபை எல்லையினுள் நேற்று (08) தொடக்கம் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு இறைச்சிக்காக மாடு அறுப்பதும் மாட்டிறைச்சி விற்பதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சியை பொதி செய்தல் என்பன தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...