குறைந்தபட்ச கையிருப்பை பேணாவிட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து !

Date:

50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை

31ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை அவதானிக்க முடிந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என குழப்பமடைய வேண்டாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச கையிருப்பை 50 வீதமாக பராமரிக்கத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை மீள்பரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...