சபரகமுவ மாகாண ஆளுநராக பதவியேற்கிறார் நவீன் திசாநாயக்க!

Date:

சபரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய் கிழமை பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பியகமயில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த வாரம் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆளுநராக பதவியேற்பார் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...