சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் புற்றுநோய் தடுப்பு ஊசிகள்-மருந்துகள் ஆணையம் அதிர்ச்சி தகவல்!

Date:

சருமத்தை வெண்மையாக்க குளுடாதியோன் (Glutathione) தடுப்பூசிகளை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா இது தொடர்பில் கூறுகையில்,

புற்றுநோயாளிகளின் சிக்கல்களைக் குறைக்க குளுடாதியோன் குறைந்த அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

சில தனியார் வைத்தியசாலைகள் இந்த தடுப்பூசியை அழகுசாதன நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன. மேலும், சருமத்தை வெண்மையாக்க வரும் வாடிக்கையாளர்களிடம் சுமார் 100,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வயதுடைய ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கவும், பளபளக்கவும் குளுடாதியோன் மாத்திரைகள் மற்றும் க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்படி அனுமதியுள்ளது. ஆனால், தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமித் பெரேரா தெரிவித்திருந்தார்.

“தடுப்பூசியைப் பயன்படுத்துபவர்கள் பல பக்க விளைவுகளை உருவாக்குகிறார்கள்.

குறிப்பாக சிறுநீரக பிரச்சினைகள், இரத்த நாளங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பல்வேறு தைராய்டு கோளாறுகள், இந்த ஊசிகளை பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சலூன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...