சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று நிபந்தனைகளை தவறவிட்ட இலங்கை

Date:

இலங்கையானது தனது வருமானத்தை பாதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடமைகள் மூன்றை தவறவிட்டுள்ளது.

கடந்த மே மாத இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிததியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிதிப் பொதி தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் 100 இல் 29ஐ இலங்கையானது கடந்த மே மாத இறுதியில் நிறைவு செய்துள்ளதாக Verité Research தெரிவிக்கிறது.

இதேவேளை, இது தொடர்புபட்ட வேலைத்திட்டத்தின் பிரகாரம் கடந்த மே மாத இறுதிக்குள் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டுமென குறித்த Verité Researchஇன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமானத்தைத் தரக்கூடிய IMFஇன் இரு நிபந்தனைகளைக்கூட அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.

பந்தயம் மற்றும் சூதாட்டங்களுக்கான அறவீட்டை அதிகரித்தல் மற்றும் மார்ச் 2023க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக வரி வருமானம் இருக்க என்கிற இரு நிபந்தனைகளையே அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

அதன்படி, பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கான எதிர்பார்க்கப்படும் வருடாந்த வருவாயை 500மில்லியன் ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பந்தயங்களுக்கான வருடாந்த வரி 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கவும், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பின்றி மேற்கொள்ளப்படும் பந்தயங்களுக்கான வருடாந்த வரியானது 75,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள அதேவேளை மொத்த வசூல் மீதான வரியை 15 வீதமாக உயர்த்துவது போன்ற நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

எனினும், தற்போது வரை குறித்த அந்த நிபந்தனையை இலங்கையால் நிறைவேற்ற முடியவில்லை எனவும் அதற்கான காரணம் பந்தயம் மற்றும் சூதாட்டங்கள் மூலம் வரி வசூல் செய்வதற்கான சட்டமூலமானது ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை வரைவு செய்யப்பட்டதாகவும் எவ்வாறாயினும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் ‘The IMF Tracker’ தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் படி, இலங்கை ஆற்றவேண்டிய நிபந்தனைகளில் 29 வீதமானவை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் 3 வீதமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் 1 வீதமானவை பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் 6 வீதமானவற்றின் நிலை தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் குறித்த அறிக்கையின் சாராம்சமாக அமைந்துள்ளது.

மேலும், 61 வீதத்தை இலங்கையானது நிறைவேற்ற வேண்டும் என ‘The IMF Tracker’ சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...