ஜனாதிபதிக்கு பசில் வழங்கும் வாக்குறுதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்க தரப்பு கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில தொழிற்சங்கங்களும் தமது கட்சியைச் சேர்ந்த சில உள்ளுர் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பாடான நிலையில் கருத்து வெளியிடுவதாகவும், ஆனால் அந்த பிரச்சினைகள் எதுவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்காத அளவுக்கு தீவிரமானவை அல்ல எனவும் தெரிவித்தார்.

கலந்துரையாடல் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும், அதற்காக மாதத்திற்கு ஒரு நாள் ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திப்பது அவசியமானது எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஏ. எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர் .

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...