தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்: ஜம்இய்யதுல் உலமாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமுஸ்ஸலாம்) தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹு தஆலா இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான்.

அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும்.

தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றியடைய முடியுமென்பதை இஸ்லாம் இதனூடாகப் போதிக்கின்றது. ஏனெனில் தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்.

இத்தினத்தில், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றப் பின்வாங்காத தந்தை மற்றும் மகனின் தியாகத்தைப் பறைசாற்றும் உழ்ஹிய்யா மற்றும் ஏனைய அமல்களை நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

அதேவேளை தியாகத் திருநாள் கற்றுத் தரும் பாடங்களான அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிதல், இறைநேசம், அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை, தவக்குல், முன்மாதிரிமிக்க, சிறந்த பிள்ளை வளர்ப்பு போன்ற பண்புகளை எமது வாழ்விலும் கடைபிடித்து வாழ்வதோடு எமது கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகளிடமும் இவ்வாறான உயர்ந்த பண்புகளை ஏற்படுத்தி ஈருலக வாழ்விலும் வெற்றிபெற முயற்சி செய்வோமாக.

மேலும், அல்லாஹு தஆலா நம் நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர துணை புரிவானாக என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கிறது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...