துப்பாக்கி பிரயோகங்களில் மூவர் பலி: இந்த ஆண்டில் 23 பேர் பலி!

Date:

ஹோமாகம துப்பாக்கி பிரயோகம்

ஹோமாகம – நியந்தகல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்குள் வருகைத் தந்த அடையாளம் தெரியாத சிலர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நியந்தகல பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கொட்டாவ துப்பாக்கி பிரயோகம்

கொட்டவ – தர்மபால பாடசாலைக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று காலை 8 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகிலுள்ள வைத்திய ஆய்வு கூடமொன்றிற்கு அருகிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்களினால், T 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் 33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காலியில் துப்பாக்கி பிரயோகம் 

காலி – கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரன் மாத்தையா என அழைக்கப்படும் வஜிர என்பவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தவர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 34ற்கும் அதிக துப்பாக்கி பிரயோகம் 

இந்த ஆண்டின் இதுவரையான 6 மாத காலம் வரை 37 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று முன்தின தகவல்களின் பிரகாரம் 34 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மேலதிகமாக மூன்று துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 37 துப்பாக்கி பிரயோகங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 60 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...