தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக ஜப்பான் செல்வதற்காக பன்னிரண்டு பேருக்கு விமான டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த குழு ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக புறப்படும் 34ஆவது திட்டமாகும். குழுவில் எட்டு செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் நான்கு கட்டுமான பயிற்சியாளர்கள் உள்ளனர்.