அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை நடத்துநர் இன்றி செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயண ஆரம்பத்திற்கு முன்பாகவே சாரதி, பயணிகளுக்கு டிக்கெட்களை விநியோகிக்கும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரித்தானியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.