மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில், பாடசாலை சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.