இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு விஹாரமகா தேவி திறந்தவெளி அரங்கில் மாபெரும் கண்டன தொழிற்சங்க போராட்டத்தை நடாத்துகின்றன.
இதனடிப்படையில், அனைத்து ஊழியர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் அதன் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளமையே என அவர் சுட்டிக்காட்டினார்.
மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபை போன்ற மாபெரும் நிறுவனத்தை தேசிய பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் கொடுப்பது பாரதூரமான நிலைமையாகும்.
அந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்துடன், தேவைப்பட்டால் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என, இன்றைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.