வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்ட ஆண்டு 2022!

Date:

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்ட ஆண்டாக, 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்ததோடு, வங்குரோத்தடைந்த நாடாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கையர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதனால், கடந்த ஆண்டு கடவுச்சீட்டுகளுக்கு (Passport) அதிகளவான கேள்விகள் நிலவியதால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தைக் காட்டிலும் அதிகளவான வருமானத்தை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு மாத்திரம் 23.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதுடன் 249 இராஜதந்திர (diplomatic passport) கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

223 வெளிநாட்டவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு கடந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தானிலிருந்து வந்த 84 பேரும், இந்தியாவிலிருந்து வந்த 70 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய 501 வெளிநாட்டவர்கள் கடந்த வருடம் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில்  401 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 512 அகதிகள்

கடந்த வருடம் 219 பேர் இலங்கையில் அகதி அந்தஸ்த்தை  (Asylum) கோரியிருக்கிறார்கள்.

அதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இலங்கையில் அகதி அந்தஸ்த்தைக் கோரியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டின் இறுதியில் ஆப்கானிஸ்தான், ஈரான், மியன்மார், பாகிஸ்தான், சூடான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 512 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 347 பேருக்கே அதிகளவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. (347 பேர்)

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...