அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: பெண் படுகாயம்!

Date:

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முகங்களை கறுப்பு துணியால் மூடி கட்டியவாறு , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைத்து , ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , வீட்டினுள் சென்று , அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

அதன் போது , வீட்டில் இருந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதான பெண்ணொருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...