அதிகாரப் பகிர்வு தொடர்பாக கேள்வி எழுப்பும் நஸீர் அஹமட்!

Date:

அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ் தரப்­பு­ட­னான பேச்­சு­வர்த்­தைகள் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் அர­சியல் தீர்­வுக்­கான அதி­கார பகிர்வு பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் தரப்பின் வகி­பாகம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­து ­தொ­டர்­பாக எமது அர­சியல் தலை­மைகள் ஒன்­று­பட்டு தீமா­ன­மொன்றை மேற்­கொள்ள வேண்டும் என சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமத் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­ல­கத்தின் புதிய கட்­டட திறப்பு விழா  அண்மையில் பிர­தேச செய­லாளர் வீ.தவ­ராஜா தலை­மையில் இடம்பெற்­றது.

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக சுற்­றாடல் அமைச்சர் நஷீர் அஹமட் உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜ­பக்ஸ நாட்டை ஆட்சி செய்­வதில் சிக்கல் ஏற்­பட்ட நிலையில் நாட்டை பாரம் எடுத்து ஆட்­சியை செய்­யு­மாறு தற்­போ­தைய எதிர்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­சாவை அழைத்து சொன்­ன­போது அவர் பின்­வாங்­கினார்.

இந்­நி­லையில் நாட்டில் ஒரு புரட்சி ஏற்­பட்டு விடுமோ என்ற அச்சம் எல்லோர் மத்­தி­யிலும் இருந்­தது.

அந்த சந்­தர்ப்­பத்­தில்தான் இன்­றைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தைரி­யத்­தோடு நாட்டை பாரம் எடுத்து பொரு­ளா­தார வீழ்ச்­சியில் இருந்த நாட்டை கட்டி எழுப்பிக் கொண்டு இருக்­கின்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் தழிழ்­த­ரப்பு அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை இடம் பெற்று அவர்­க­ளது கோரிக்­கை­கள் கேட்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அதி­கார பகிர்வில் முஸ்­லிம்­க­ளு­டைய பங்கு என்ன என்­கின்ற விட­யத்தை மிகவும் தெட்டத் தெளி­வாக ஆணித்­த­ர­மாக முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் எல்­லோரும் உடன்­பாட்­டுக்கு வர­வேண்­டிய தேவை இருந்­தது.

இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட போது இர­வோடு இர­வாக முஸ்­லிம்­க­ளு­டைய உரி­மைகள் பறிக்­கப்­பட்ட ஒரு அரச சாச­ன­மா­கத்தான் பதின்­மூன்­றா­வது திருத்தம் இருந்­தது. அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு முஸ்லிம்
சமு­கத்­தி­னு­டைய ஒட்டு மொத்த அர­சியல் தலை­வி­தியை மாற்­றிய ஒரு வர­லாற்­றினை நாங்கள் எப்­போதம் மறந்­து­விட முடி­யாது.

அவ்­வா­றா­ன­தொரு வர­லாறு மீண்டும் எழு­தப்­பட்டு விடக்­ கூ­டாது என்­ப­தற்­காக நாங்கள் மிகவும் தெளி­வாக இருக்­கின்றோம். இர­வோடு இர­வா­கத்தான் பதின்­மூன்­றா­வது திருத்தம் இந்­தி­யா­வி­னு­டைய அழுத்­தத்­தினால் நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போது முஸ்­லிம்­களால் எதுவும் பேச­மு­டி­யாமல் இருந்­தது.

அப்­போ­தி­ருந்த ஜே.ஆர் ஜெய­வர்த்­தனவிடம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தலை­மையில் முஸ்­லிம்­க­ளது அர­சியல் நில­வரம் என்ன என்று கதைப்பதற்கு சென்ற வேளையில் உங்களுக்கு கதவு திறந்து இருக்கின்றது வெளியே போகலாம் என்று சொல்லப்பட்டது.

அவ்வாறான ஒரு நிலைமைக்கு முஸ்லிம்கள் மீண்டும் தள்ளப்பட்டு விடக்கூடாது என்று நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...