இம்முறை தேசிய மீலாத் விழாவை மன்னாரில் நடத்த விதுர விக்ரமநாயக்க தீர்மானம்!

Date:

இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார  அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இவ் வைபவங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் தலைமையில் அதிகாரிகள் குழு ஏற்கனவே களப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்க உள்ளனர்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...