இறக்குமதி செய்யப்பட்ட 100 ஆடுகளில் 38 ஆடுகள் மரணம்: கோபா குழு அறிக்கையில் தகவல்

Date:

இம்புலதண்ட ஆடு வளர்ப்பு நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 100 ஆடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் 11 ஆடுகள் உட்பட 38 ஆடுகள் இறந்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்துள்ளது.

மேலும், 2017ஆம் ஆண்டு ஆடு இறக்குமதிக்கு கொள்முதல் வாரியம் ஒப்புதல் அளித்த போதிலும், 2019ஆம் ஆண்டு இந்த ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டதால், மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், 2,311,760 ரூபாயை கூடுதல் பணமாக செலுத்த வேண்டியிருந்ததும் தெரியவந்தது.

கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளார்.

இம்புல்தண்ட மற்றும் தெலஹெரையில் ஆடு வளர்ப்பு மையங்கள் இயங்குகின்றன. இம்புல்தண்டவில் இருந்து ஆடுகள் தெலஹெரைக்கு மாற்றப்பட்டு 34 மில்லியன் செலவழித்து 100 ஆடுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இம்புல்தண்டவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

அவற்றுள் 90 பெண் ஆடுகளும் 10 கடாக்களும் அடங்குகின்றன. இந்த 100 ஆடுகளில் 38 இறந்துள்ளன. 315 குட்டிகளில் 54 குட்டிகள் இறந்துள்ளன.

மொத்த தரவுகளை எடுத்துக்கொண்டால் 611 குட்டிகள் தெலஹெர பிரதேசத்தில் காணப்பட்டுள்ள நிலையில் இதில் 377 குட்டிகள் உயிரிழந்துள்ளன.

இந்த இறப்பு 50க்கு மேல் இதற்கு காரணம் என்ன? இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளில் 11 தனிமைப்படுத்தலின் போது இறந்துவிட்டன. இந்த விலங்குகள் சரியாக பரிசோதிக்கப்படவில்லையா?” என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அதிகாரி வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்கனி முனசிங்க,

நாட்டிற்கு கொண்டு வரும் கால்நடை வைத்திய அதிகாரியின் சுகாதார சான்றிதழின் அடிப்படையில் நாங்கள் விலங்குகளை நாட்டிற்கு கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...