இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை 24ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டது.
இந்த சந்திப்பில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர், லெப்டினன்ட் கமாண்டர் ஷான் ஜின் ஆகியோர் கலந்து கொண்டனர்.