இலங்கை – ஈரானுக்கிடையில் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய,கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் விதுர விக்ரமநா யக்க மற்றும் ஈரான் கலாசார நிலையத்தின் ஆலோசகர் கலாநிதி மொசாம் சுதர்ஷினி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று  இவ்வாரம் கொழும்பு ஈரான் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய, கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரான் கலாசார நிலையத்தின் கலாசார ஆலோசகர் லாநிதி மொசாம் சுதர்ஷினியை சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் பயனாக பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கின்றன.

அத்துடன் தொல்லியல் காப்பகங்கள், அருங் காட்சியகங்கள் மற்றும் பிற கல்வித் துறைகளுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், மத ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான யாத்திரை பரிமாற்ற நிகழ்ச்சிகள்.

மேலும் இரு நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட உயர்தர திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தல் போன்றவை குறித்தும் கலந்துரையாடினோம். என்றார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...