இலங்கை ஜனாதிபதியுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் ஜனாதிபதி!

Date:

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று  திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த இலங்கை ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கையின் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தானின் கடினமான பொருளாதார சூழ்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி பாராட்டினார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...