உலகளவில் இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 95 ஆவது இடம்!

Date:

கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் கடவுச்சீட்டு 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. Henley and Partners Index 2023 இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Henley and Partners Index சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் வெளியிடப்படுகின்றது.

இது உலகின் அனைத்து கடவுச்சீட்டுக்களின் அசல் தரவரிசையாகும், அவற்றினை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து இத்தரப்படுத்தல் வெளியிடப்படுகின்து.

சமீபத்திய சுட்டெண்ணின் படி, 41 நாடுகள் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணம் அல்லது விசா-ஆன்-அரைவல் ஆகியவற்றை வழங்கியுள்ள நிலையில், இலங்கை தரவரிசையில் முன்னேறியுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு 2022 இல் 103 ஆவது இடத்திலும் 2021 இல் 107 ஆவது இடத்திலும் இருந்தது.

சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வீசா இன்றியோ அல்லது வருகைக்கு ஏற்ப வீசா மூலமாகவோ நுழைய முடியும்.

இதவேளை இந்திய கடவுச்சீட்டு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது மற்றும் இப்போது சமீபத்திய குறியீட்டில் 80 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் இது 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது.

இதேவேளை, இலங்கையின் அண்டை நாடுகளான மாலைதீவு தரவரிசையில் 57ஆவது இடத்திலும், பூட்டான் 84ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 96 ஆவது இடத்திலும், நேபாளம் 98ஆவது இடத்திலும், பாகிஸ்தான்
100ஆவது இடத்திலும் உள்ளன.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...