எர்டோகன்- ஜெலன்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்தது துருக்கி!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவி செய்து வருகிறது.

இராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது. துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17 ஆம் திகதி முடிவடைகிறது. இதை நீடித்து ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா தயக்கம் காட்டுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...