கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொழும்பில் டெங்கு நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...