2022 ஜூலை 09 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கள் போராட்டத்திற்கு நேற்றுடன் (09) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.

இதனையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தினால் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.

அதன்படி, நேற்று பிற்பகல் பத்தரமுல்ல தியத்த உயனவுக்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் அதில் சங்கத்தினர், சிவில் அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
