லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி,12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 2,982 ரூபாவாகும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 1,198 ரூபாயாகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 561 ரூபாவாகவும் குறைக்க லிட்ரோ காஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலை குறைப்பது இது நான்காவது தடவை என முதித பீரிஸ் தெரிவித்தார்.