சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் திணைக்களத்திற்கு!

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அதன் பின்னரே அந்த அதிகாரிகள் அங்கு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...