சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை : எதிர்க்கட்சி அறிவிப்பு

Date:

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

தரமற்ற மருந்துகள்  இறக்குமதி மற்றும் மருந்து இறக்குமதியில் இடம்பெற்றவரும் ஊழல் – மோசடிகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச, இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் உள்ளதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளோம் எனவும் கூறினார்.

சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சிகள், சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளன.

அதற்கான அறிவிப்பையே எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

என்றாலும், எத்தகையை நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தாலும் அவற்றை தோற்கடிப்பதில் உறுதியாகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சரை பதவி நீக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...