‘தமிழர்களுக்கான வரைபில் முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட வேண்டும்’

Date:

ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லிம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின் தீர்வாக அமைக்கப்படும் வரைபு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களுக்கு சார்ந்து எவ்வளவு முதன்மை படுத்தப்படுகின்றதே அதேயளவு முஸ்லிம், சிங்கள, மலையக மக்களுக்கும் உரித்துடைய பங்கு இந்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த வரைவு உள்ளடக்கவேண்டும் என முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வரைபை மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் தெளிவையும் உண்மை தன்மையையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகள் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் இந்த விடையம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பிற்பாடு ஊடகங்கள் மூலம் அதனை அறிவிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த வரைபினுடைய உள்ளடக்கம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கின்ற அல்லது இலங்கையினுடைய அரசியல் அமைப்பில் பொருத்தப்பாடு உடையது என கருதப்படக் கூடியதை உள்ளடக்கி இந்த வரைபை முதன்மை படுத்தியுள்ளது கூட்டாசியும் கூட்டு சமஸ்டிக்குரியது 13 சார்ந்தும் உரையாடப்படுகின்றதுடன் இவை எல்லாவற்றையும் ஈழ தமிழர்களின் ஒரே வரைவாக முதன்மைபடுத்தும் நோக்கோடு வரையப்படும்.

இலங்கை அரசாக இருக்கலாம் அல்லது அரசுடன் பயணிக்க கூடிய பிற சக்;திகள் மற்றும் புலம் பெயர்ந்த தளத்தில் உள்ள அமைப்புக்கள் உடன் உரையாடலை செய்து இந்த வரைவை முதன்மைப்படுத்த வேண்டும்.

அதனுடைய பிரதிபலிப்பு முஸ்லிம்கள் அல்லது சிங்கள மக்கள் சர்ந்து முதன்மைபடுத்தப்படல் என்பது இதனுடைய வரைபில் செயல்பூர்வமான வடிவத்துக்கு கொண்டுவரும் போது அது தொடர்பான முழுமையானது காணப்படும்.

இதில் தேசியங்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரித்துடைய அதாவது ஈழத் தமிழர்களுக்கு முதன்மை படுத்தப்படுகின்ற அதே அளவு முதன்மை முஸ்லிம் சிங்கள, மலையக மக்களுக்கும் உரித்துடைய பங்கினை இந்த வரைபு தனுக்குள்ளே உள்ளடக்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...